அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் இலங்கை வருகை

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று வருகை தந்த அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜாய் மோஸ்டினை கட்டுநாயக்க விமான நிலையத்தில், வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட இலங்கை அதிகாரிகள் வரவேற்றனர்.
அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகத்தின் வருகை குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஹேரத்,
ஆளுநர் நாயகத்தின் உத்தியோகபூர்வ விஜயம் இலங்கை-அவுஸ்திரேலிய இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதிலும், முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதிலும் ஒரு முக்கியமான படியைக் குறிக்கிறது என்றார்.
தனது விஜயத்தின் போது, ஆளுநர்நாயகம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமந்தா ஜாய் மோஸ்டினை, பண்டாரகம, மிரிஸ்ஸ மற்றும் வெலிகம ஆகிய இடங்களில் அவுஸ்திரேலியாவால் ஆதரிக்கப்படும் பல திட்டங்களையும் பார்வையிடுவார்.