News

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அதிரடி நடவடிக்கை; சிலர் கைது, 20 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்!

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தலைக்கவசம் அணியாமல், சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் மற்றும் போக்குவரத்து சட்ட திட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் கீழ் சிலரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்தோடு மோட்டார் சைக்கிளையும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மீட்டுள்ளனர்.இச் சம்பவம் இன்று (26) வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம்,

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதான வீதியில் வைத்து இக் கைது இடம்பெற்றுள்ளது.சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் நடவடிக்கையின் போது சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், சில மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்கள் உள்ளிட்ட சான்றுப் பொருள்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் சம்மாந்துறை, சவளக்கடை, மத்திய முகாம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், இந்த கைது நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனைக்கு அமைய, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.நிசாந்த பிரதிப்குமாரவின் தலைமையிலான குழுவினரினால் குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button