News
இன்று (05) பிற்பகல் கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் நடைபெற்ற “சித் ரூ-2025” கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இலங்கை முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “ஒன்றாக – கைவிடாத” என்ற தேசிய கொள்கைக்கு இணங்க, அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து சமூகமயப்படுத்தல், வலுப்படுத்தல், புனர்வாழ்வு மற்றும் நாட்டின் பொருளாதார செயற்பாட்டில் பங்கேற்பவர்களாகவும் பெருமைமிக்க பிரஜைகளாகவும், வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் அழகியல் திறமைகளை வெளிப்படுத்த ஒரு புதிய தளத்தை வழங்கவும் சுய திருப்தியுடன் அவர்களை தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காகவும் ஏற்பாடு செய்யப்படும் இத்தகைய கலாசார நிகழ்ச்சிகளை நான் மிகவும் பாராட்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
