World News

இந்தியாவுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயார்!

இந்தியாவுடன் நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகள் தொடர்பில், அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்தப் பாகிஸ்தான் தயாராக இருப்பதாக, அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர், தண்ணீர் பிரச்சினை, வர்த்தகம் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகள் உள்பட நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்துக் கொள்ள, இந்தியாவுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்குப் பாகிஸ்தான் தயாராக உள்ளது எனப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 22, பாகிஸ்தான் பயங்கரவாதிகள், பஹல்காமில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள, பயங்கரவாத முகாம்கள் மீது, இந்தியா மே 7 அன்று ஆபசேரன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது.

இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

மே 10 அன்று இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதனால் தாக்குதல் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப் பாகிஸ்தான் தயாராக இருப்பதாகப் பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button