குவைத்தில் டாக்ஸி ஓட்டுநருக்கு பணம் கொடுக்காமல் மிரட்டிய பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டன:

குவைத்தில் வாடகை டாக்ஸி ஓட்டுநரை பணம் கொடுக்காமல் மிரட்டியதாகவும், பணியில் இருந்த பெண் காவல்துறை அதிகாரிகளை திட்டியதாகவும் 50 வயது பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாட்டின் அபு கலீஃபா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வெளிநாட்டினரான டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் உள்துறை அமைச்சகத்தில் புகார் அளித்தார்.
அதில் மூன்று பெண்கள் கட்டண அடிப்படையில் டாக்ஸியில் ஏற்றினேன் எனவும், அவர்கள் தங்கள் செல்ல வேண்டிய இடத்தை அடைந்ததும் பணம் கொடுக்காமல் மிரட்டியதாகவும் ஓட்டுநர் புகாரில் தெரிவித்துள்ளார். புகாரைப் பெற்ற உடனேயே, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூன்று பெண்களையும் கைது செய்தனர். இருப்பினும், அவர்கள் போலீசாருடன் ஒத்துழைக்க மறுத்து ரகளை செய்து சம்பவம் நடந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தினர்.
பின்னர், பெண் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த நேரத்தில், அந்த பெண் பெண் காவல்துறை அதிகாரிகளை திட்டி, மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தினர். இதைத் தொடர்ந்து, அந்தப் பெண்கள் மீது பிரிவு 134 இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குவைத் சட்டத்தின் பிரிவு 134 இன் படி, பணியில் இருக்கும் ஒரு அரசு ஊழியரை வாய்மொழியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை மற்றும் 100 முதல் 300 தினார் வரை அபராதம் விதிக்கப்படும் என்பது சட்டமாகும்..