News

அம்பாறை – நிந்தவூர் ஸ்ரீ சிவ முத்து மாரியம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு திருச்சடங்கு பெருவிழா – 2025

#ஜூன் 20, 2025 முதல் ஜூன் 27, 2025 வரை
அம்பாறை மாவட்டம், நிந்தவூரில் அமைந்துள்ள ஸ்ரீ சிவ முத்து மாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு திருச்சடங்கு பெருவிழா, இந்த ஆண்டும் விமர்சையாக நடைபெறவுள்ளது!

#ஆனி மாதம் 6 ஆம் நாள் (ஜூன் 20, 2025) தொடங்கி, ஆனி மாதம் 13 ஆம் நாள் (ஜூன் 27, 2025) வரை பக்தர்கள் அனைவரும் அம்மனின் அருளைப் பெறலாம்.

விழா நிகழ்வுகள்:

🔷தினசரி பூஜைகள்: ஒவ்வொரு நாளும் பகல் 1.30 மணிக்கும், இரவு 7.30 மணி முதல் 10.00 மணி வரையிலும் சடங்கு பூஜைகள் நடைபெறும்.
🔷தீ மூட்டுதல்: ஜூன் 26, 2025 அன்று இரவு தீ மூட்டுதல் நிகழ்வு இடம்பெறும்.
🔷தீமிதித்தல் மற்றும் பைரவர் பூஜை:

#ஜூன் 27, 2025 அன்று அதிகாலையில் தீமிதித்தல் மற்றும் பைரவர் பூஜை நடைபெறும்.

விழா நாட்களில் அன்னதானம், சமய சொற்பொழிவுகள், கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அனைத்து பக்தர்களும் பூக்கள், பூமாலைகள், பால், பழங்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்கி, அன்னை ஸ்ரீ சிவ முத்து மாரியம்மனின் அருளைப் பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

#நிர்வாகம்: நிந்தவூர் தமிழீன அறப்பணி மன்றம் & ஆலய பரிபாலன சபையினர்.

#அம்பாறை #நிந்தவூர் #ஸ்ரீசிவமுத்துமாரியம்மன்ஆலயம் #தீமிதிப்புவிழா #2025trends #அம்மன்அருள்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button