Sri Lanka News
நாட்டெங்கும் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்

மருதானை பொலிஸ் பிரிவுக்குபட்ட பஞ்சிகாவத்தை வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கிக்கு முன்னால் இன்று (06) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
பாணந்துறை, அலுபோமுல்ல பகுதியில் உள்ள ஒரு கடையில் இன்று (6) காலை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
கிராண்ட்பாஸ் மாவத்த பகுதியில் நேற்று (05) இரவு இடம்பெற்ற பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாத பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் களனியைச் சேர்ந்த 26 வயதான இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.