News

டுபாய் விமான சேவைகள் திடீர் ரத்து

மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள் தொடர்பான புதிய அறிவிப்பை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ளது.

இதன்படி, இன்று கொழும்பு மற்றும் டுபாய்க்கு இடையிலான சில வானூர்தி சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து டுபாய் நோக்கிப் பயணிக்கும் UL231 மற்றும் டுபாயிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் UL232 ஆகிய விமான சேவைகளே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த மாற்றங்களினால் பாதிக்கப்படும் பயணிகள், தங்களது விமான பயண நிலை குறித்த மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள www.srilankan.com என்ற இணையதளத்தைப் பார்வையிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன், மேலதிக உதவிகள் தேவைப்படும் பயணிகள் இலங்கைக்குள் 1979 என்ற இலக்கத்தின் ஊடாகவும், சர்வதேச ரீதியாக +94 11 777 1979 என்ற இலக்கத்தின் ஊடாகவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உலகளாவிய தொடர்பு மையத்தைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, அருகிலுள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் அல்லது பயண முகவர்களையும் அணுக முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button