India News
த.வெ.க உறுப்பினர் செயலி நாளை வெளியீடு

தமிழ வெற்றிக் கழக உறுப்பினர் சேர்க்கை செயலியை, அதன் தலைவர் விஜய் நாளையதினம் வெளியிடவுள்ளார்.
பனையூரில் நாளையதினம் த.வெ.க மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தின் போது தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான வியூகங்களையும் நாளை தினம் விஜய் வெளியிடவுள்ளார்.
மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து உறுப்பினர்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து சேர்க்கும் நோக்கில் குறித்த செயலி வெளியிடப்படவுள்ளமை சிறப்பம்சமாகும்.