உயிருக்கு அச்சுறுத்தல் – டிஎஸ்பி சுந்தரேசன் பரபரப்பு பேட்டி!

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் ஒரு நேர்மையான அதிகாரி என்பதால் குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர் என்றும், தவறு செய்து இருந்தால் ஏன் என்னை சஸ்பெண்ட் செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
எனது ஒன்பது மாத ஊதிய உயர்வை உயர் அதிகாரிகள் தடுக்கின்றனர் என்றும், என் மீது மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தவறான தகவல்களை தெரிவிப்பதாகவும் கூறினார்.
“முதலமைச்சர் ஏன் இன்னும் எனது பிரச்சனையில் தலையிடவில்லை என தனக்கு தெரியவில்லை என்றும், காவல்துறையில் ஸ்டார் முக்கியமில்லை, மன நிம்மதி மட்டுமே முக்கியம் என்றும் அவர் கூறினார்.
தனது பிரச்சனையை மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்றும், தன்னை விசாரிக்காமல் எப்படி டிஐஜி சஸ்பென்ட் செய்ய பரிந்துரைக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழக டிஜிபி ஏன் என்னை அழைத்து இன்னும் விசாரிக்கவில்லை எனவும் தெரியவில்லை எனறும், காவல்துறையில் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளேன் என்றும், உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் தெரிவித்தார்.