Sri Lanka News
தலவத்துகொடவில் துப்பாக்கிச்சூடு

தலவத்துகொடவில் உள்ள ஒரு இரவு விடுதியின் முன் இன்று (19) அதிகாலை துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரு குழுக்களுக்கிடையிலான வாக்குவாதம் மோதலாக மாறியதைத் தொடர்ந்து, உரிமம் பெற்ற ரிவால்வருடன் வந்த நபர் ஒருவர் சுவரில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடுடன் தொடர்புடைய இருவர் கைதுசெய்யப்பட்டு, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.