India News

அணிலே ஓரமா போய் விளையாடு – விஜயின் த.வெ.க. தொண்டர்களைக் கேலி செய்த சீமான்!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கொனேரிகொன் கோட்டை மீட்பு பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் கருத்துரைத்த சீமான், த.வெ.க. தொண்டர்களைக் கேலி செய்து பேசியது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

”த.வெ.க. தொண்டர்களிடம் உங்கள் கொள்கை என்ன என்று கேட்டால் தளபதி தளபதி என்று கத்துகின்றனர், எனக்கோ அது தலைவிதி தலைவிதி என்று கேட்கிறது” எனச் சீமான் தெரிவித்துள்ளார்.

”எதற்காக வருகை தந்தீர்கள் எனக் கேட்டால் TVK TVK என்று கத்துகின்றனர். டீ விற்கவா இவ்வளவு பேர் வந்திருக்கின்றீர்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

”புலி வேட்டைக்குச் செல்லும் வழியில் அணில்கள் குறுக்கே ஓடுகின்றன. பத்திரமாக மரத்தில் ஏறி இருங்கள். அணிலே ஓரமா போய் விளையாடு, குறுக்கே வராதே. அணிலை வேட்டையாடி சாப்பிட்டால் புலிக்கு என்ன மரியாதை” என்று சீமான் கேலி செய்துள்ளார்.

சீமானின் இந்த கருத்து சமூக ஊடகங்களில் பரவலாகி வருவதுடன் விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button