Sports
இரட்டைத் தங்கப் பதக்கம் வென்று கென்ட் விளையாட்டு கழகத்தின் முர்சித் சாதனை!

தியாகம மகிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற 38வது மாஸ்டர்ஸ் (திறந்த) தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், கென்ட் விளையாட்டு கழகத்தின் மூத்த வீரர் முர்சித் அவர்கள், உயரம் தாண்டுதல் (High Jump) மற்றும் மும்முறை தாண்டுதல் (Triple Jump) ஆகிய இரண்டு போட்டிகளிலும் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்!


அவரது கடின உழைப்பு, ஒழுக்கம், மற்றும் அர்ப்பணிப்பு இன்று இந்த அற்புதமான வெற்றிகளாக மலர்ந்துள்ளன. உண்மையிலேயே பாராட்டுக்குரிய செயல்!
இது வெறும் ஆரம்பம் மட்டுமே! முர்சித் அவர்கள் நாளை நடைபெறவுள்ள நீளம் தாண்டுதல் (Long Jump) போட்டியிலும் பங்கேற்கவுள்ளார். அவர் இந்தப் போட்டியிலும் வெற்றிபெற மனமார்ந்த சோசியல் டிவி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாழ்த்துகள் முர்சித்!