India News
அஹமதாபாத் விமான விபத்து – முதற்கட்ட விசாரணை அறிக்கை சமர்பிப்பு

அஹமதாபாத்தில் 275 பேர் உயிரிழக்கக் காரணமான எயார் இந்தியா விமான விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கை இந்திய மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது விரைவில் பொது வெளியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விபத்து குறித்து, விமான விபத்து புலனாய்வு பணியகம் விசாரணை நடத்தி வந்தது. இந்த குழுவினர், சம்பவ இடத்துக்கு நேரில் சென்று, ஆய்வு நடத்தி தகவல்களை சேகரித்து இருந்தனர்.
இந்நிலையில் இந்த குழுவினர் தங்களது முதற்கட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.