
ரயில் மோதி காட்டு யானை உயிரிழப்பு
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற ரயிலில், இன்று (18) காலை காட்டு யானையொன்று மோதி உயிரிழந்தது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து காலை 5.30 மணியளவில், கல்லெல்ல பகுதியில் இடம்பெற்றது. சுமார் 15 வயது மற்றும் 8 அடி உயரமுடைய இந்த யானை, அதற்கு முன்னதாக அப்பகுதியின் நெல் வயல்களில் உணவுக்காகச் சென்றிருந்தது என்றும், அதிகாலை 3 மணி முதல் கிராமத்தில் சுற்றித் திரிந்தது என்றும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வனவிலங்குத் துறைக்கு தகவல் வழங்க முயற்சி செய்தபோதும், அதிகாரிகள் தொலைபேசி தொடர்பை துண்டித்திருந்தனர் என கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வனவிலங்கு அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.