Sports
கிளப் உலகக்கிண்ண கால்பந்து – மெஸ்சியின் இண்டர் மியாமி அணி வெளியேற்றம்

கிளப் அணிகளுக்கான 21-வது உலகக்கிண்ண கால்பந்து போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 16 அணிகள் ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இதில் ஜோர்ஜியாவில் நடந்த ஒரு போட்டியில் மெஸ்சி தலைமையிலான இன்டர் மியாமி அணி, பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் உடன் மோதியது.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் அடுத்தடுத்து கோல்கள் போட்டு அசத்தியது. இண்டர் மியாமி அணி பதில் கோல் அடிக்க எவ்வளவோ முயற்சித்தும் அந்த அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
முடிவில் பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் 4-0 என்ற கோல் கணக்கில் இண்டர் மியாமி அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. தோல்வியடைந்த இண்டர் மியாமி அணி தொடரிலிருந்து வெளியேறியது.