Accident
தேங்காய் விழுந்ததில் இரண்டு வயது சிறுவனொருவன் உயிரிழப்பு

சிலாபம் – வென்னப்புவ பகுதியில் தலையில் தேங்காய் விழுந்ததில் இரண்டு வயது சிறுவனொருவன் உயிரிழந்துள்ளான்.
வென்னப்புவ – பண்டிரிபுவ பகுதியில் நேற்றுமுன்தினம் தேங்காய் மட்டை வெட்டும் வீட்டொன்றில் பணிபுரியும் தமது தாய் மற்றும் தந்தையுடன் இருந்தபோது குறித்த சிறுவன் சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளான்.
விபத்தின் பின்னர் மயக்கமடைந்த குறித்த சிறுவன்,மாரவில மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. எனினும் நிலைமை மோசமாக இருந்ததால் சிறுவன் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிறுவன் உயிரிழந்தான்.
வறுமையில் வாடும் சிறுவனின் குடும்பத்தினருக்கு இறுதிச் சடங்குகளைச் செய்யக்கூட வசதி இல்லாததால், கொழும்பு தேசிய மருத்துவமனையில் உடல் அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது