Home வெளிநாட்டுச் செய்திகள்கொலம்பியாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கொலம்பியாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

by Mohamed Siraj
0 comments

மேற்கு கொலம்பியாவில் இன்று (10) சக்திவாய்ந்த 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

உள்ளூர் நேரப்படி காலை 7.34 மணியளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி, சாஃகோ திணைக்களத்தில் உள்ள சான் ஜோஸ் டெல் பால்மர் பகுதியில், தலைநகர் போகொடாவுக்கு மேற்கே சுமார் 280 கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் சுமார் 107 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

banner

இதன் அதிர்வுகள் கொலம்பியாவின் பல நகரங்களில் உணரப்பட்டுள்ளன.

சாஃகோ பிராந்தியத்தின் தலைநகரான கிப்டோவில் நிலநடுக்கத்தால் காயங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்தப் பிராந்திய ஆளுநர் நுபியா கரோலினா கோர்டோபா தெரிவித்துள்ளார்.

மேலும், நிலநடுக்கத்துக்குப் பின்னர் ஏற்படக்கூடிய தொடர் அதிர்வுகள் குறித்தும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இதனிடையே, தலைநகர் போகொடாவிலும் நிலநடுக்கத்தின் அதிர்வு பலமாக உணரப்பட்டுள்ளது.

எச்சரிக்கை மணிகள் ஒலிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலர் கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

எனினும், இதுவரை போகொடாவில் உயிரிழப்புகள் அல்லது பாரிய கட்டமைப்பு சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என மேயர் கார்ட்லோஸ் கெலன் தெரிவித்துள்ளார்.

சில கட்டிடங்களில் மாத்திரம் சிறிய விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment