2
சவுதி அரேபியாவில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஜுஃமா பிரசங்கத்தில் (குத்பா), “போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவது மற்றும் உயிரைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம்” குறித்து உரையாற்ற வேண்டும் என இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அரசும் அதிகாரிகளும் அமல்படுத்தும் போக்குவரத்து விதிகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுவது ஒவ்வொருவரின் ஆன்மீகக் கடமையாகும் என்றும், உயிரைப் பாதுகாப்பதே இஸ்லாத்தின் முதன்மை நோக்கம் என்பதால் விபத்துகளைத் தவிர்க்க விதிகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும் இந்தச் செய்தியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
