Sri Lanka News
மக்களுக்கு அநுர கொடுக்கப்போகும் 10 ஆயிரம் ரூபா.! வெளியான உண்மை தகவல்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வறிய மக்களுக்கு தலா பத்தாயிரம் ரூபா வழங்குவதாக வெளியான தகவல் குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு விளக்கம் அளித்துள்ளது.
உலக வங்கியுடன் இணைந்து பத்தாயிரம் ரூபா பணத்தை ஜனாதிபதி வழங்க உள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
எனினும் இந்த செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
பொதுமக்களை பிழையாக வழிநடத்தவும் அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்கவும் இவ்வாறு போலிப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.