Sri Lanka News

கம்பஹா பகுதியில் நாளை 12 மணிநேரம் நீர்விநியோகத்தடை

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை (07) 12 மணிநேரம் நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

திருத்தப்பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகத்தடை மேற்கொள்ளப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை (07) காலை 8.30 முதல் இரவு 8.30 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பேலியகொடை, வத்தளை, ஜா – எல , கட்டுநாயக்க, சீதுவை நகர சபைக்கு உட்பட்ட பகுதிகள், களனி, பியகம, மஹர, தொம்பே, கந்தானை, மினுவாங்கொடை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நீர்விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button