Sri Lanka News
அஸ்வெசும மேன்முறையீடுகளுக்கான காலக்கெடு நீட்டிப்பு!

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு அறிவிப்பு!
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெறுவதில் ஏதேனும் ஆட்சேபனைகள் அல்லது மேன்முறையீடுகள் இருந்தால், அவற்றைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூலை 16ஆம் திகதி வரை பொதுமக்கள் தங்கள் மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்க முடியும் என கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தகுதியான அனைவரும் தங்கள் மேன்முறையீடுகளை உரிய முறையில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.