
ஹொரவ்பொதானை பிரதேச சபையின் புதிய தலைவர் தெரிவு இன்று 17/06/25 நடைபெற்றது. இதில் தலைவராக NPP சார்பாக போட்டியிட்ட சகோதரர் தரங்க பிரசாத் அவர்கள் 21 மொத்த வாக்குகளில் 12 வாக்குகளைப் பெற்று 5 மேலதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டதோடு எதிர்க் கட்சி சார்பாக போட்டியிட்ட NM பாசில் அவர்கள் 7 வாக்குகளைப் பெற்றார். . அதேபோன்று சுயேட்சைக் குழுவில் போட்டியிட்ட சம்பத் அவர்களும் அவரது அணியைச்சேர்ந்த இன்னுமொரு உறுப்பினரும் எந்த தரப்புக்கும் தமது ஆதரவினைத் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு உப தலைவராக ACMC சார்பாக போட்டியிட்ட H நெளபர் அவர்கள் 11 வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டார்.
A.M.UWAIS,
அமைப்பாளர்,
நிக்கவெவ வட்டாரம்,
தேசிய மக்கள் சக்தி.