News

தங்க விலையில் மீண்டும் மாற்றம் – இன்று இலங்கையில் சற்று குறைவு

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில், இன்று தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டியுள்ளது.

அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கம் 4,676.4 ஆகவும் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 72.71 டொலராகவும் அதிகரித்துள்ளது.

இருப்பினும் இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் இன்று (06) காலை தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 398,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 366,200 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,750 ரூபாயாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,775 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதாரக் காரணிகள் மற்றும் டொலரின் பெறுமதி மாற்றங்களுக்கு அமைய, உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின் விலையில் இவ்வாறான தொடர்ச்சியான ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button