World News

மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர திட்ட வரைபு; ஈரான் – அமெரிக்கா அமைதி ஒப்பந்தம்

ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திட்ட வரைபு ஒன்றைப் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அது இன்று முதல் நடைமுறைக்கு வந்து ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்றும் தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரொயிட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையின்படி, மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு கட்டமைப்பைப் பாகிஸ்தான் தயாரித்துள்ளது.

இது நேற்றிரவு ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு வழங்கப்பட்டது.

இந்தத் திட்டம் இரண்டு கட்ட அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டது என்றும், முதலில் உடனடி போர்நிறுத்தமும் அதைத் தொடர்ந்து ஒரு விரிவான உடன்படிக்கையும் எட்டப்படும் என்றும் விளக்கப்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட புரிந்துணர்வு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமாக வடிவமைக்கப்படும் என்றும், பேச்சுவார்த்தைகளின் ஒரே தகவல் தொடர்பு ஊடகமாக இருக்கும் பாகிஸ்தான் ஊடாக இது இறுதி செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கும், முடக்கப்பட்ட வெளிநாட்டுச் சொத்துக்களை விடுவிப்பதற்கும் ஈடாக, அணு ஆயுதங்களை உருவாக்க மாட்டோம் என்று ஈரான் உறுதியளிப்பதை இந்த ஒப்பந்தம் உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் ரொய்ட்டர்ஸ் வௌியிட்டுள்ள இந்த செய்தி இருநாடுகள் ஊடாகவும் இதுவரை உத்தியோகப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இதேவேளை கடந்த 24 மணித்தியாலங்களில் 15 கப்பல்கள் ஈரானின் அனுமதியுடன் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button