Sri Lanka News
எரிவாயு விலை உயர்வு – இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பால் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ரைஸ், கொத்து மற்றும் உணவு பொதி ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் விருந்தக உரிமையாளர்களின் சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி ரைஸ், கொத்து மற்றும் உணவு பொதி ஆகியன 20 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
அதேநேரம், தேங்காய் எண்ணெய் விலை குறைந்துள்ளதன் காரணமாக சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவால் குறைந்துள்ளது.
நேற்றைய தினம் சமையல் எரிவாயுவின் விலைகள் திடீரென பாரியளவில் அதிகரிப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு உணவுகளின் விலைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.




