Sports

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டெல்லி அணி!

இன்று டெல்லியில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான விறுவிறுப்பான ஆட்டத்தில், டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடர்ச்சியாக தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.

இந்தப் போட்டியில், ‘இம்பாக்ட் பிளேயர்’ சமீர் ரிஸ்வியின் அதிரடியான பேட்டிங் ஆட்டத்தின் போக்கை ஒட்டுமொத்தமாக மாற்றியது.

முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 51 ரன்கள் எடுத்து அரைசதம் கடந்து அசத்தினார்.

அவருடன் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 26 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்து நல்ல பங்களிப்பை வழங்கினார்.

டெல்லி அணியின் பந்துவீச்சில் முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்ட, லுங்கி என்கிடி, அக்சர் படேல், விப்ரஜ் நிகம் மற்றும் நடராஜன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி மும்பை அணியின் ஓட்ட வேகத்தைக் கட்டுப்படுத்தினர்.

163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணிக்குத் தொடக்கம் மிகவும் மோசமாக அமைந்தது. தொடக்க வீரர் கே.எல். ராகுல் வெறும் 1 ரன்னிலும், நிதிஷ் ராணா ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழக்க, அணி 7 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து பெரும் சரிவைச் சந்தித்தது.

இந்த இக்கட்டான தருணத்தில் கைகோர்த்த சமீர் ரிஸ்வி மற்றும் பத்தும் நிசங்கா ஜோடி, நிதானமாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தது.

மெதுவாக இருந்த ஆடுகளத்தில் ஆரம்பத்தில் கவனமாக விளையாடிய இந்த இணை, பின்னர் அதிரடி காட்டத் தொடங்கியது.

குறிப்பாக, சமீர் ரிஸ்வி மும்பை பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்து, மைதானத்தின் நாலாபுறமும் சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். பத்தும் நிசங்கா 30 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாலும், சமீர் ரிஸ்வி தனது அதிரடியைத் தொடர்ந்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button