Sri Lanka News

எரிபொருள் நிரப்பு நிலையங்களை நடத்திச் செல்வதில் கடும் நெருக்கடி! உரிமையாளர்கள் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

நாட்டின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் நாளை (06) முற்பகல் 9.30 மணி முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு முன்னால் அமைதிப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விநியோகத்தின் போது பின்பற்றப்படும் ஒற்றை மற்றும் இரட்டை இலக்க முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளே இந்தப் போராட்டத்திற்கான பிரதான காரணம் என அச்சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் டி.வி. சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், இந்த முறைமையினால் ஊழியர்கள் கடுமையாக அசெளகரியங்களுக்கு உள்ளாகியிருப்பதாகக் குறிப்பிட்டார்.

எரிபொருள் விலை சூத்திரத்தின்படி, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய நிறுவனங்கள் 6% இலாபத்தைப் பெற்றுக்கொள்வதாகவும், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 3% இலாபப் பங்கு வழங்கப்பட வேண்டும் என்ற போதிலும், கூட்டுத்தாபனத்தின் புதிய நிர்வாகத்தினால் அது வெட்டப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், ஓடர் செய்யப்பட்ட டீசல் மற்றும் பெற்றோல் முறையாக வழங்கப்படாததால், எரிபொருள் நிரப்பு நிலையங்களை நடத்திச் செல்வதில் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் டி.வி. சாந்த சில்வா சுட்டிக்காட்டினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button