World News

ஈரானிய இராணுவத் தளபதிகள் பலி: ட்ரம்ப் அறிவிப்பு

டெஹ்ரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில், ஈரானை தூரநோக்கற்ற முறையில் வழிநடத்திய பல இராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள குறிப்பொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

டெஹ்ரான் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல்களில் மேலும் பல இலக்குகள் அழிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

உடன்படிக்கைகளுக்கு வருவதற்கு அல்லது ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கு டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு வழங்கிய 48 மணிநேரக் காலக்கெடு முடிவடைவதற்கு முன்னரே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

எவ்வாறாயினும், இந்தத் தாக்குதல் தொடர்பாக ஈரான் அரசாங்கம் இதுவரையில் எவ்வித உறுதிப்படுத்தலையும் அல்லது மறுப்பையும் வெளியிடவில்லை.

இதேவேளை, குவைத் நாட்டில் உள்ள மின்சாரம் மற்றும் நீர் உற்பத்தி நிலையங்களை இலக்கு வைத்து ஈரான் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button