Accident

இன்று அதிகாலை வந்தாறுமூலை பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில்சிக்கி 15 வயது சிறுமி உட்பட இருவர்உயிரிழப்பு, பெண் ஒருவர் படுகாயம்!

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கி பிரயாணித்த கார் வீதி இரண்டாவது மையில்கல் பகுதியில் வேககட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி பனைமரத்துடன் மோதிய விபத்தில் காரை செலுத்தி சென்றவர் மற்றும் 15 வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழந்ததுடன் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனமதிக்கப்பட்ட சம்பவம் இன்று திங்கட்கிழமை (23)அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

மட்டக்களப்பு சின்ன ஊறணி கருவப்பங்கேணி செலியன் வீதி
இரண்டாம் குறுக்கைச் சேர்ந்த ஜெந்திரகுமார் சஞ்சய் , கருவப்பங்கேணி மற்றும் நாவலர் வீதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியான பிரதீபன் தவஸ்வாணி
ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்துவரும் நிலையில் உயிரிழந்த சிறுமியான மகளுடன் கருவப்பங்கேணியில் உள்ள அவர்களது பன்றிவளர்க்கும் பண்ணையை பார்ப்பதற்காக சம்பவதினமான இன்று அதிகாலை கார் சாரதியுடன் பயணித்தபோது கார் வேககட்டுப்பாட்டை மீறி பணைமரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதியும் 15 சிறுமியும் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்த சிறுமியின் தாயாரான பாலச்சந்திரன் மோகனகாந்தி மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாh.;

இதில் உயிரிழந்தவர்களின் சடலம் மட்டுபோதனா வைத்தியசாலை பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் போக்குவர்து பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button