Home செய்திகள்அமெரிக்கா 1,200 குடியேறிகளை லைபீரியாவுக்கு நாடு கடத்தும் ஒப்பந்தம் – முதல் கட்டமாக 20 பேர் அனுப்பப்பட்டனர்!

அமெரிக்கா 1,200 குடியேறிகளை லைபீரியாவுக்கு நாடு கடத்தும் ஒப்பந்தம் – முதல் கட்டமாக 20 பேர் அனுப்பப்பட்டனர்!

by Nabishad
0 comments

-Nabishad Abu Hanshif-

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 20 பேர் வியாழக்கிழமை லைபீரியாவை சென்றடைந்துள்ளனர்.
டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில், மொத்தம் 1,200 பேர் வரை லைபீரியாவுக்கு அனுப்பப்படவுள்ளனர்.

இந்த 20 பேரும் லைபீரியாவின் தலைநகர் மொன்ரோவியாவுக்கு வெளியே அமைந்துள்ள ராபர்ட்ஸ் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தனர்.
அமெரிக்கா மற்றும் லைபீரியா இடையிலான இந்த ஒப்பந்தம், ட்ரம்ப் மீண்டும் அதிபராகப் பதவியேற்ற பின்னர் அவரது நிர்வாகத்தால் முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய மூன்றாம் நாடு நாடுகடத்தல் ஒப்பந்தங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
லைபீரிய தகவல் அமைச்சர் ஜெரோலின்மெக் பியா (Jerolinmek Piah) தெரிவித்ததாவது, நாடு கடத்தப்படவுள்ள 1,200 பேரில் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவார்கள்.

இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் லைபீரியாவின் நீதித்துறை அமைச்சர் நாட்டு ஒஸ்வால்ட் ட்வே (Natu Oswald Tweh) கூறுகையில், நாடு கடத்தப்படவுள்ளவர்களில் பெரும்பாலானோர் குடியேற்றம் தொடர்பான விதிமீறல்கள் மற்றும் குற்றங்களைச் செய்தவர்கள் என தெரிவித்தார்.

banner

மேலும், லைபீரியாவுக்கு வந்த பின்னர் அவர்கள் விரும்பினால் அரசியல் தஞ்சம் (Asylum) கோருவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment