5
அவுஸ்திரேலியா–வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் வங்கதேச அணி 64 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை 12 ஓட்டங்களுக்கு கைப்பற்றினார்.
ஆனால் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியும் தடுமாறியது. ஷொரிபுல் இஸ்லாம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முதல் நாள் முடிவில் அவுஸ்திரேலியா 8 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றிருந்ததுடன், 101 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது. கேமரன் கிரீன் 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
முதல் நாளில் மட்டும் மொத்தம் 18 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளதால், போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

