13.08.2026 அன்று கோட்டைக்கல்லாறு பொது சுகாதாரப் பரிசோதகர் (PHI) பிரிவிற்குட்பட்ட ஓந்தாச்சிமடம் வடக்கு மற்றும் ஓந்தாச்சிமடம் தெற்கு பகுதிகளில் விசேட நுளம்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக காளி கோவில் வீதி, மேற்கு வீதி மற்றும் மகிழூர் வீதி ஆகிய பகுதிகளில் இரசாயனப் புகை விசிறல் (Fogging) நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, வளர்ந்த நுளம்புகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
பொதுமக்கள் தமது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் காணப்படும் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை உடனடியாக அகற்றி, சுகாதாரத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் நுளம்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.





