Home இலங்கைச் செய்திகள்நேபாள வெள்ள அனர்த்தம்: உதவிக்கரம் நீட்ட இலங்கை தயார்!

நேபாள வெள்ள அனர்த்தம்: உதவிக்கரம் நீட்ட இலங்கை தயார்!

by Nabishad
0 comments

நேபாளத்தின் இமயமலை எல்லைப் பகுதியில் ஏற்ப்பட்ட பாரிய பனிமலைச் சரிவுடன் கூடிய திடீர் வெள்ளப்பெருக்கினால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிக்ள முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மீட்பு பணிகளுக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்க இலங்கை தயாராகவுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் ஏற்ப்பட்ட இந்த திடீர் அனர்த்த நிலை மற்றும் இதனால் ஏற்ப்பட்ட உயிரிழப்புகள் தம்மை ஆழ்ந்த அதிருப்திக்கும் கவலைக்கும் உட்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தின் ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் அனைத்து நேபாள மக்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் இயற்கை பேரழிவினால் ஏற்படும் கஷ்டங்களை நன்றாக உணர்ந்த நாடாக இலங்கை இந்த இக்கட்டான சூழலில் நேபாளத்துடன் கைகோர்த்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

banner

You may also like

Leave a Comment