26
இலங்கை அணியின் 25 வயதான சோனல் தினுஷ், இந்தியாவுக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாளில் தனது முதல் டெஸ்ட் சதத்தை (100) பதிவு செய்தார்.
இலங்கை அணியின் முதல் 4 விக்கெட்டுகள் வெறும் 60 ஓட்டங்களுக்கு வீழ்ந்திருந்த இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய அவர், 168 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 100 ஓட்டங்களை எட்டி இந்த சிறப்பான சாதனையைப் படைத்தார்.
