World News

சவுதி அரேபியாவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

சவுதி அரேபியாவில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்நாட்டு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கஞ்சா கடத்திய குற்றத்திற்காக, நாட்டின் தெற்கு பகுதியான நஜ்ரானில் 4 சோமாலியர்கள் மற்றும் 3 எத்தியோப்பியர்கள் தூக்கிலிடப்பட்டனர். மேலும், ஒரு சவுதி குடிமகன் ஒருவருக்கு, தனது தாயைக் கொலை செய்த குற்றத்திற்காக மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து சவுதி அரேபியாவில் இதுவரை 230 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதில் 154 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தூக்கிலிடப்பட்டனர். 2022ம் ஆண்டு 19 பேருக்கும், 2023ம் ஆண்டு 2 பேருக்கும். 2024ம் ஆண்டு 117 பேருக்கு போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தூக்கிலிடப்பட்டனர். கடந்த 2024ம் ஆண்டு 338 மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக சவுதி அரேபியா கடந்த 2022ம் ஆண்டு இறுதியில் போதைப்பொருள் குற்றங்களுக்கு மரணதண்டனையை மீண்டும் அமல்படுத்தியது. இதற்கு முன் மூன்று ஆண்டுகளுக்கு இத்தகைய குற்றங்களுக்கு மரணதண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button