World News

ஈரானுடன் இந்த வாரம் பேச்சுவார்த்தை நடைபெறும் என அமெரிக்கா எதிர்பார்ப்பு

ஈரான் இந்த வாரம் வொஷிங்டனுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தும் என்று தான் நம்புவதாக அமெரிக்காவின் விசேட தூதூவர் Steve Witkoff தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தெஹ்ரான் ஒப்பந்தம் ஒன்றைச் செய்ய விரும்புவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

“இந்த வாரம் சந்திப்புகள் நடைபெறும் என்று நாங்கள் நினைக்கிறோம், நிச்சயமாக அதற்காக நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்று விசேட தூதூவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் அமைதித் திட்டத்திற்கு தெஹ்ரானிடமிருந்து பதிலை எதிர்பார்ப்பதாகக் கூறிய அவர், “எங்களிடம் 15 அம்சத் திட்டம் உள்ளதுடன், ஈரானியர்கள் அதற்குப் பதிலளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

அது அனைத்தையும் தீர்க்கக்கூடும்,” என்று தெரிவித்தார். ஈரான் தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் ஹோர்முஸ் நீரிணை ஊடாக 10 எண்ணெய் தாங்கிக் கப்பல்களை அனுமதித்துள்ளதாக ட்ரம்ப் கூறியதை Witkoff உறுதிப்படுத்தினார்.

“கப்பல்கள் கடந்து செல்கின்றன, இது ஒரு நல்ல அறிகுறியாகும்” என்று அவர் மேலும் கூறினார்.

ஈரான் மீதான கடும் எச்சரிக்கைகளுக்கு மத்தியில், தெஹ்ரான் ஒரு ஒப்பந்தத்திற்குத் தயாராக இருப்பதாகவும், வரும் வாரங்களில் போர் முடிவுக்கு வரும் என்றும் ட்ரம்ப் கூறி வருகிறார்.

மியாமிக்கு வருகை தந்தபோதும் அவர் அதே நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். ஈரான் தற்போது அழிவைச் சந்தித்து வருகிறது.

அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள், நாமும் இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ள விரும்புகிறார்கள், என்று ட்ரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button