World News

எண்ணெய் விலை உயர்வு – சமாளிக்க வழி தேடும் ஆசிய நாடுகள்

ஈரான் போர்ச்சூழல் காரணமாக உலக நாடுகளில் எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.தற்போதைய நிலவரப்படி, Brent எனும் உலகின் முக்கிய கச்சா எண்ணெயின் விலை சற்றுக் குறைந்துள்ளது.

இன்று ஒரு பீப்பாய் கச்சாஎண்ணெய் 86.63 டாலராக விற்கப்படுகிறது.

ஆனால் நேற்று கடைசியாக அதன் விலை பீப்பாய்க்கு 91.70 டாலராகப் பதிவானது.

இன்றைய விலையுடன் ஒப்பிட்டால் அது 5 டாலர் அதிகம்.கச்சா எண்ணெயின் விலை இப்படி நிலையற்று இருப்பதால் பொருளாதாரத்தையும் மக்களையும் பாதுகாக்க ஆசிய நாடுகள் சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.

அவற்றைப் பட்டியலிட்டது இச்செய்திஇந்தியா📌கடலில் சிக்கியிருக்கும் கச்சா எண்ணெயை விற்க ரஷ்யாவுக்கு விதித்திருந்த தடைகளை அமெரிக்கா தற்காலிகமாகத் தளர்த்தியுள்ளது.

📌இதனால் இந்தியா ரஷ்யாவிடமிருந்து மீண்டும் எண்ணெய் வாங்கத் தொடங்கியுள்ளது.

பங்களாதேஷ்📌பங்களாதேஷில் பங்கீட்டு முறையில் எண்ணெய் வழங்கப்படுகிறது.

📌இதனால் பெட்ரோல் நிலையங்களில் வாகனமோட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

மலேசியா📌எண்ணெய் உற்பத்தி நாடாக இருப்பதால் மலேசியாவில் பாதிப்புகள் கடுமையாக இருக்காது என்று அங்குள்ள நிபுணர்கள் நம்புகின்றனர்.

தென்கொரியா📌கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல்முறையாக உள்நாட்டு எரிபொருள் விலை வரம்பைத் தென்கொரியா கொண்டுவந்துள்ளது.

சீனா📌டீசல், பெட்ரோல் ஏற்றுமதியை நிறுத்தி வைக்குமாறு தனது முக்கிய சுத்திகரிப்பு நிலையங்களுக்குச் சீனா உத்தரவிட்டுள்ளது.

📌உள்நாட்டுத் தேவைக்கு முன்னுரிமை அளிக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறது.

ஜப்பான்📌கையிருப்பிலுள்ள கச்சா எண்ணெயைச் சந்தையில் விடப் பணம் செலுத்துமாறு தேசிய எண்ணெய் இருப்புச் சேமிப்புத் தளத்துக்கு (National Oil Reserves) அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இந்தோனேசியா📌வாகனமோட்டிகளுக்குப் பெரிய சிக்கல்கள் இல்லை.📌எண்ணெய் விலை உயர்வால் ஏற்படும் பாதிப்புகளை அரசாங்கமே ஏற்கவுள்ளது.

தாய்லந்து📌சமையல் எரிவாயு விலைகளை அப்படியே வைத்திருக்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

📌எரிசக்தித் தேவைகளைத் தன்னால் கையாள முடியும் என்கிறது.பிலிப்பின்ஸ்📌எரிபொருள் விலை படிப்படியாக உயர்த்தப்படுகிறது.

📌விலை இன்னும் உயரலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.மொத்தத்தில் ஆசிய நாடுகள் 3 நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகின்றன.

அவை:1. கையிருப்பு/சேமித்து வைப்பது (Stockpiles)

2. மாற்று வழியைக் கையாள்வது (Re-routing)

3. பங்கீட்டு முறை (Rationing)ஒருவேளை ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்லும் எண்ணெய்க் கப்பல்களின் போக்குவரத்து தொடர்ந்து முடங்கினால், இந்த நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்யும் நிலை வரலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button