Sri Lanka News

கோழி இறைச்சியின் விலை உயர்வு

உள்ளூர் சந்தைகளில் கோழி இறைச்சியின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

பஸ்டியன் மாவத்தை கோழி வியாபாரிகள் சங்கத் தலைவர், எம்.ஐ.எம். இக்பால் இது தொடர்பில் கூறுகையில், சந்தையில் நேற்று (15) கோழி இறைச்சி ஒரு கிலோ 1,400 ரூபாவாகஉயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சந்தையில் ஏற்பட்ட சமீபத்திய ஏற்ற, இறக்கங்களைத் தொடர்ந்து இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

இது சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர் இருவரையும் பாதிக்கிறது என தெரிவித்தார்.

இதேவேளை இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையில் அதிகரிப்பு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வர்த்தக பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக இலங்கையில் பொருட்களின் விலை அதிகரிப்பதை தவிர்க்க முடியாத நிலை காணப்படுவதாகவும், இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button