Sri Lanka News

தொல்பொருள் அகழ்வு: பெண் உட்பட மூவர் கைது!

உடுதும்பர பிரதேசத்தில் தொல்பொருட்களைத் தேடும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வுப் பணிகளில் ஈடுபட்ட பெண் உட்பட மூவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உடுதும்பர பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, அகழ்வுப் பணிகளுக்காக அவர்கள் பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் இரு ஆண்கள் முறையே 45 மற்றும் 50 வயதுடையவர்கள் எனவும், சந்தேகநபரான பெண் 45 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மூவரும் உடுதும்பர, கஹடலியத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உடுதும்பர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button