நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு; இன்றைய நிலை இதுதான்..! பொலிஸார் தீவிர பாதுகாப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு தற்பொழுது படிப்படியாக குறைந்த வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது கிளிநொச்சி மாவட்டத்தின் நகர பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றது.கொள்கலனில் எரிபொருள் வழங்கப்படவில்லை.
இதன் காரணமாக எரிபொருள் பாவனையாளர்கள் சுமுகமான முறையில் தமக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ள கூடிய வகையில் எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை நாட்டின் ஏனைய பகுதிகளில் எரிபொருள் விநியோகமும் இடம்பெற்று வருகின்றது. எனினும் மக்கள் வரிசையில் நின்றே எரிபொருளை கொள்வனவு செய்து வருகின்றது.
அத்தோடு நேற்றையதினம் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என்ற பதாதைகள் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்து எரிபொருள் தட்டுப்பாடானது இன்னும் ஓரிரு தினங்களில் சாதாரணமான நிலைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் பொலிஸாரின் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய, அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிலவும் நீண்ட வரிசைகளுக்கு மத்தியில் ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தீர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அத்துடன், எரிபொருளைப் பதுக்குவோர் தொடர்பில் நாடளாவிய ரீதியில் புலனாய்வுத் துறையினர் சோதனைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




