இல்லத்தில் இருந்து உள்ளத்தை காப்போம்” – பெண்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாநாடு சம்மாந்துறையில்

✍️மஜீட். ARM
போதைப்பொருள் பயன்பாடு சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள நிலையில், பெண்களினூடாக மாற்றத்தைக் கொண்டு வரும் நோக்குடன், சம்மாந்துறை சமத்துவ மக்கள் அமைப்பு ஒரு சிறப்பு விழிப்புணர்வு மாநாட்டை ஏற்பாடு செய்தது.
“இல்லத்தில் இருந்து உள்ளத்தை காப்போம்” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சிரேஷ்ட விரிவுரையாளர் அப்துல் ஹமீத் (ஷரயீ) அவர்கள் சிறப்பு சொற்பொழிவாற்றினார்.
இந்த போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாநாட்டில், பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ். ஜெயலத், சம்மாந்துறை உதவி பொலிஸ்மா அதிபர், இராணுவ உயர் அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளர் சத்தார் மிர்ஷா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
சமத்துவ மக்கள் அமைப்பு மற்றும் அழ்பர் ஜும்மாஹ் பள்ளிவாசல் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு சம்மாந்துறையில் நடைபெற்றது.
இப்படியான சமூக நலன் சார்ந்த நிகழ்வுகள் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதோடு, நமது எதிர்கால சமூகத்தை பாதுகாக்கவும் உதவும்.