Sri Lanka News

உயர் தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் (G.C.E A/L) செய்முறைப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

தொழில்நுட்பவியல் பாடங்கள்

பொறிமுறைகள் தொழில்நுட்பவியல் பாடத்திற்கான செய்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி முதல் மார்ச் 15 ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைத் துறையைச் சார்ந்த பின்வரும் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் மார்ச் 09 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன:

நாட்டியம் (தேசிய மற்றும் பரதம்)

சங்கீதம் (கீழைத்தேய மற்றும் மேலைத்தேய)

நாடகமும் அரங்கியலும் (சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம்)

இது தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் அறிவுறுத்தல்களைப் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆவணத்தில் விரிவாகக் காணலாம்..

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button