India NewsSri Lanka News

அர்ஷத் இஸ்மாயில் அவர்களுக்கு இந்தியாவில் சிறந்த இளம் தலைவருக்கான கௌரவிப்பு

(Nabishad Abu Hanshif)

Social tv Media Network Pvt Ltd,

www.socialtv24.lk

புது தில்லியில் நடைபெற்ற நிறுவன வளர்ச்சி மற்றும் சிறப்பிற்கான புதுமையான தலைமைத்துவம் குறித்த சர்வதேச பயிற்சித் திட்டம் (ILOGE) இடம்பெற்றது.

குறித்த பயிற்சித்திட்டத்தில் பல்வேறு விரிவுரைகளில் பல்வேறு மதிப்பீடுகள் இடம்பெற்றன

இதில் சூழ்நிலை தலைத்துவக் கோட்பாடு எனும் தொனிப்பொருளானது கலாநிதி பாருள் ஜாஹ்ஜரியா அவர்களினால் நடாத்தப்பட்டதுடன் பல்வேறு கட்சி சார்பாக கலந்து கொண்ட 24 பங்குதார்ர்கள் பல குழுக்களாக பிரிக்கப்பட்டு பல்வேறு சூழ்நிலையினை அரசியல்பிரமுகராக எவ்வாறு முகம் கொடுக்க முடியும் என்பது தொடர்பாக மதிப்பீடு ஒன்று அவரால் நடாத்தப்பட்டது.

குறித்த மதிப்பீட்டில் அர்ஷத் இஸ்மாயில் அவர்களின் தலைமையிலான குழு முதலிடம் பெற்று வாழ்த்தினையும் பரிசினையும் பெற்றுக் கொண்டனர்.

வெற்றியீட்டிய குழு உறுப்பினர்களாக அர்ஷத் இஸ்மாயில்(SLMC), புஸ்பாகரன்(ITAK),அனுஸன்(SJB), ஸ்வாதி(NPP), லியான் றொபட்(UWF) ஆகியோர் காணப்பட்டனர்.

மதிப்பீட்டு நிகழ்ச்சித்திட்டத்தில் அர்ஷத் இஸ்மாயில் அவர்கள் உள்நாட்டு அபிவிருத்தி அமைச்சராகவும், புஸ்பாகரன் அவர்கள் வெளிநாட்டு முதலீட்டாளராகவும், அனுஸன்,ஸ்வாதி, லியான் றொபட் ஆகியோர் அமைச்சின் உத்தியோகத்தர்களாகவும் செயற்பட்டு மதிப்பீட்டில் அதிக புள்ளியினை ஈட்டினர்.

இறுதியில் விரிவுரையாளர் அவர்களால் வெற்றி ஈட்டிய குழுவினர் வாழ்த்தப்பட்டு சிறந்த குழத்தலைவர், சிறந்த இளந்தலைவர் எனவும் அர்ஷத் இஸ்மயில் வாழ்த்தப்பட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button