Sri Lanka NewsWorld News
குவைத் வாழ் இலங்கையர்களுக்கு அறிவிப்பு!

குவைத்தில் தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதாக அந்நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் லக்ஷித ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
குவைத்தில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல்களை நடத்தியுள்ள போதிலும், அந்தத் தாக்குதல்களினால் எந்தவொரு இலங்கையருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாகக் குவைத்தில் தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் இலங்கைத் தூதுவர் அறிவித்துள்ளார்.
அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பில் தூதரகம் தொடர்ச்சியான கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதுடன், குவைத் பாதுகாப்புப் பிரிவினருடன் இணைந்து நிலைமைகளை அவதானித்துப் பாதுகாப்புத் தகவல்களைக் கேட்டறிந்து வருவதாகவும் லக்ஷித ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.




