Sri Lanka News

நிந்தவூர் பிரதேச சபை தவிசாளரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த Social TV குழு

நிந்தவூர் பிரதேச சபை தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ரியாஸ் ஆதம் அவர்களை இன்று நேரில் சந்தித்து Social TV குழுவினர் அவருக்கு தங்களின் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

சோசியல் டிவி ஊடக வலையமைப்பின் ஸ்தாபக பணிப்பாளர் என்.எம். முஹம்மட் சிறாஜ் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்த சந்திப்பில், சோசியல் டிவியின் செயலாளர் அகிலா சிறாஜ், அறிவிப்பாளர் பாத்திமா நஸ்லா மற்றும் சோசியல் டிவியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினர்.

அவரது பதவிக்காலம் மக்கள் நலன் மற்றும் பிரதேச முன்னேற்றத்திற்காக பயனுள்ள சேவைகளால் நிறைந்ததாக அமைய Social TV சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button