Sports
மீண்டும் மோதும் இந்தியா, பாகிஸ்தான் – கைகுலுக்கல் இடம்பெறுமா?

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் மற்றுமொரு முக்கிய போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
டுபாயில் நடைபெறவுள்ள குறித்த போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
கடந்த வாரம் இரண்டு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற போட்டி இந்திய அணியினரின் கைகுலுக்கல் மறுப்பு காரணமாக பேசுபொருளாக மாறியிருந்தது.
இந்தநிலையில் கைகுலுக்கல் மறுப்பு இன்றைய போட்டியிலும் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி குறித்த போட்டி இன்றிரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




