மேட் ஹென்றி அபார பந்துவீச்சு; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து த்ரில் வெற்றி!

முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 7 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், மேட் ஹென்றியின் அபார பந்துவீச்சின் காரணமாக நியூசிலாந்து த்ரில் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
ஜிம்பாப்வேவில் நடைபெற்று வந்த முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் முன்னேறின. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் செஃபெர்ட் – டெவான் கான்வே அணி சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் இருவரும் 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் டிம் செஃபெர்ட் 30 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து டெவான் கான்வேவும் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 47 ரன்களிலும் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.