Sri Lanka News

வீட்டு ஓடுகளுக்குக் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 118 தோட்டாக்கள் மீட்பு

அம்பாறை மாவட்டம் பாணமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியிலுள்ள வீடொன்றைப் பழுதுபார்க்கும் போது கூரை ஓடுகளுக்குக் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5.56 x 45mm ரகத்தைச் சேர்ந்த 118 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டு இன்று பாணமை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

குறித்த வீட்டின் உரிமையாளர் தற்போது கொழும்பில் வசிப்பதுடன் தனது சகோதரரிடம் வீட்டைப் பழுதுபார்க்கும் பொறுப்பை ஒப்படைத்திருந்தார். இதன்போதே இந்தத் தோட்டாக்கள் சிக்கியுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தரவின் உத்தரவின் பேரில் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல மற்றும் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார ஆகியோரின் மேற்பார்வையில் பாணமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button