பாடசாலை நேரங்களில் கனிமப் போக்குவரத்தை மேற்கொள்ளத் தடை

பாடசாலை நாட்களில் காலை 6.30 மணி முதல் 7.45 மணி வரையிலும், காலை 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையிலும் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு பாடசாலை வேன் மணல் டிப்பர் லொறியில் மோதி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் திருமதி தீபானி வீரக்கோன் தெரிவித்தார்.
அதன்படி, அந்தக் காலங்களில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாகனங்கள் சாலையில் கிடைக்கும் இடங்களில் நிறுத்தப்பட வேண்டும் என்று திருமதி தீபானி வீரக்கோன் கூறினார்.
இந்த விழிப்புணர்வு பிரசாரங்கள் கடந்த 4 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் உள்ள பிரதேச செயலகங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.